இந்த முகநூல் பக்கத்தில் கேட்கப்படும் அதிகப்படியான கேள்விகளில் ஒன்று, “நீண்ட நேரம் விந்து வராமல் உறவு கொள்ள என்ன செய்ய வேண்டும்?”
வெகு நீண்ட தேடலுக்குப் பிறகு அதற்கான விடையுடன் வந்துள்ளேன்.
பெருவாரியான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இதை சரி செய்ய என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், சீக்கிரம் விந்து வருவதால் என் மனைவியை திருப்தி படுத்த முடியவில்லை, சீக்கிரம் விந்து வருவதால் திருமணம் செய்யலாமா வேண்டாமா, சீக்கிரம் விந்து வருவது ஆண்மைக்குறைவின் வெளிப்பாடா, என் பல கேள்விகள். இந்தப் பதிவில் அதற்கான விடை உங்களுக்காக.
நீங்கள் மட்டும் இந்த பிரச்சயானால் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களும் ஒருவர். மனைவியுடன் உறவு கொள்ள நேர்ந்த சில மணித்துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கி விடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழுமையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கையை நடத்தும் மனைவிகளும் இங்கே மிக அதிகம்.
இதற்கு உடல், பழக்கவழக்கம் மற்றும் மனம் சார்ந்த பல காரணங்கள் உள்ளன.
99% ஆண்கள் சுய இன்பம் கொள்கின்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவு நேரம் சுய இன்பம் காண்கின்றனர் என்பது முக்கியமான காரணிகள். பெரும்பாலும், குளியலறையில், படுக்கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொதுவாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்குள் முடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெளியேற்றி முடித்துவிட முயற்சிக்கிறார்கள்.
இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உடலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே பிரதிபலிக்கிறது. அதாவது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்கப்பட்டதால் உடலும் அதையே திரும்பவும் செய்கிறது. விளைவு மேலே சொன்ன விந்து முந்துதல் ஒரு பிரச்சினையாய் உருவெடுத்தல்.
இதை சரி செய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான் சுய மதிப்பீடு.
எப்படி செய்வது அதை? சொல்கிறேன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக.
உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண் குறி எப்படி இயங்குகிறது, என்ன செய்கிறது, உச்ச கட்டம் வருகையிலும், விந்து வருகையிலும் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன்றதே அது.
விறைத்தலில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன.
1) நீளமாதல்
2) பெரிதாதல்
3) முழு விறைப்பு
4) கடின விறைப்பு
நான்காவது நிலையான கடின விறைப்பு உச்சகட்டம் அல்லது விந்து வருவதற்கு சற்று முன் நிகழும் நிகழ்வாகும். இந்த நிலைகளை ஆண் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சரி. இப்போது வழிமுறைகளைப் பாப்போம்.
1) மூச்சின் சக்தி:
வேகமாக தன்னிச்சையாக மூச்சு விடுவதால் நீங்கள் உங்களின் குறியின் மேலே அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அதனால் அதிகம் தூண்டப்படுவீர்கள். எனவே உறவு கொள்ளுகையில் உங்கள் மூச்சின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தன்னிச்சையான வேகமான மூசுவிடுதலாக அல்லாமல் உங்களால் கட்டுப்படுத்தப்பட்ட மெதுவான மற்றும் ஆழமான மூச்சு விடுதலாக அது அமைய வேண்டும். இந்த மெதுவான மூச்சுவிடுதல் உங்களின் அதிகபட்ச உணர்வுகளை கட்டுப்படுத்தி விந்து வருவதை தாமதப்படுத்தும்.
அதே போல மூச்சை வெளி விடுகையில் சிங்கம் உருமுவதைப் போன்ற லேசான சத்தம் எழுப்பி வாய் வழியாக மூச்சை வெளிவிட வேண்டும். (நீலப்படங்களில் ஆண்கள் இந்த முறையை உபயோகப் படுத்துவதை பார்த்திருப்பீர்கள்). இப்படி மூச்சை வெளியேற்றுவதால், இந்த சத்தம் உங்களின் விதைப்பையில் ஆரம்பித்து, அடி வயிறு மற்றும் நுரையீரலைக் கடந்து உங்களின் வாய் வழியாக வெளியேறுவதாக நீங்க உணருவீர்கள். இதனால் நிச்சயமாக உங்களின் குறியில் இருந்து கவனம் திசை திருப்பப்படும், அதனால் விந்து வருகிறது என்ற உணர்வை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
2)(PC Muscles) தசையை சுருக்கி விரித்தல்:
இதை எப்படி செய்ய வேண்டுமெனில், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப் பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்த தசையை உபயோகிக்கிறீர்களோ அதை தான் இங்கே செய்யப் போகிறீர்கள். ஒரே வித்தியாசம் சிறுநீர் கழிக்காமல் அந்த தசையை சுருக்கி விரிக்கப் போகிறீர்கள். அதாவது விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகையில் இதை நீங்கள் செய்ய வேண்டும்.
3)விதைப்பையை இழுத்தல்:
விந்து வருவதுபோல் உள்ள சமயத்தில் உங்களின் விதைப்பை மேலே எழும்பி உங்களின் குறியோடு ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை மெதுவா விதையுடன் சேர்த்து உங்களின் உடலில் இருந்து சற்று கீழே இழுக்க வேண்டும். இதை உங்க மனைவியே செய்யலாம். ஆனால் நீங்கள் அதை அவரிடம் கூற வேண்டும். இல்லாத பட்சத்தில் அவருக்கு உங்களுக்கு விந்து வருவதை உணரத் தெரியாது.
4)குறி மொட்டை நசுக்குதல்:
விந்து வரும் உணர்வு வருகையில் உங்களின் குறியை வெளியில் எடுத்து அதன் நுனி மொட்டை நன்றாக நசுக்கி விடுங்கள். அதனால் ரத ஓட்டம் தடை பட்டு உணர்வுகள் சிறுது நேரத்திற்கு மட்டுப்படும்.
5)மிகச்சிறந்த முறை:
இதை ஒரு பயிற்சியாக தினமும் செய்ய வேண்டும். உங்களின் நாக்கை உள்நோக்கி மடித்து மேல் அண்ணத்தைத் தொடுமாறு வைத்து, உங்களின் (PC Muscles) தசையை சுருக்கி விரித்து சுருக்கி விரித்து இந்த பயிற்சியை தினமும் 3 – 5 நிமிடங்கள் செய்ய வேண்டும் இது மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும்.
6)நெட்டுதல் முறை:
இந்த முறையில் ஆழமாக குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல் மற்றும் மேலோட்டமாக செலுத்துதல் என்ற இரண்டு முறை இதில் பின்பற்றப்பட வேண்டும். அதாவது, மேலோட்டமான முறையில் மற்றும் ஆழமாக நெட்டுதல் முறையில் குறியை முழுதும் உட்செலுத்தி உறவு கொள்ளுதல்.
அதாவது 9 முறை மேலோட்டமாகவும், 1 முறை ஆழமாகவும் உட்செலுத்த வேண்டும். ஏனென்றால் பெண்ணுறுப்பு முதல் 1.5 – 2.5 அங்குலம் வரை மட்டுமே உணர்ச்சி மிகுந்த பகுதி, ஆழமான பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அவ்வளவாக இல்லை. அதனால் பெண் அதிகம் தூண்டப்படுவாள். அதிகம் இன்பம் அனுபவிப்பாள். அதே சமயம், ஆணுறுப்பு முழுமையாக பெண் உறுப்பினுள் இருந்தால் மட்டுமே, அதிகமாக உணர்ச்சிகள் மேலெழும், சீக்கிரம் விந்து வரும். ஆனால் மிக சிறிய அளவு மட்டுமே இந்த முறையில் உட்செலுதப்படுவதால் நீங்கள் விந்தை வெளியேற்றாமல் நீண்ட நேரம் உறவு கொள்ள முடியும்.
7) அவள் இன்பம் அனுபவிப்பதை ரசியுங்கள்:
பெரும்பாலான ஆண்கள் உறவுகொள்ளுகையில் தங்களின் மனைவி என்ன உணருகிறார், எப்படி உணருகிறாள் என்பதை ரசிக்க மறந்து தாங்கள் இன்பம் துய்ப்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். அதனால் தங்களின் குறியின் மேல் கவனம் செலுத்துகின்றனர். விளைவு சீக்கிரம் விந்து வந்து விடுகிறது. மாறாக உங்கள் குறியை மறந்து அவளை ரசியுங்கள். அவளின் உடல் எவ்வளவு மென்மையாய் இருக்கிறது, சற்றும் ரோமம் இல்லாமல் பளபளவென்று இருக்கிறது, அவளின் மார்பகங்களை ரசியுங்கள், உறவு கொள்ளுகையில் அவள் முனகுவதை ரசியுங்கள். அதனால் நீங்க உங்கள் குறியின் மீது கவனம் செலுத்த மாட்டீர்கள். நீண்ட நேரம் உறவு கொள்ளவும் முடியும்.
கணவன்மார்கள் இதை மனைவியிடமும், மணம் ஆகாத வாலிபர்கள் இதை சுய இன்பம் செய்யுகையிலும் முயற்சித்துப் பாருங்கள். சரியாக சொன்னபடி முயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீண்ட உறவில் இன்பம் எய்த முடியும். வெறுமனே 1 அல்லது 2 முறை முயற்சித்து விட்டு இது சரி இல்லை என்று குறை கூறாதீர்கள். தொடர்து முயன்று வெற்றி கிட்டும் வரை செய்யுங்கள். ஒரு முறை வெற்றியை நீங்கள் சுவைத்துவிட்டால், வாழ்நாள் முழுதும் இதைக் கடைபிடித்து இன்பம் துய்ப்பீர்கள்.
0 comments:
Post a Comment